பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்பின் படங்களை காமெடியே பிரதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் வர படங்களில் எதிர்பார்ப்பதும் அதைத்தான். திலீப்பே காமெடியில் பட்டையை கிளப்புவார் என்றாலும் தன்னுடன் சரிசமமாக காமெடி நடிகர்களை பயணிக்க விடுவதால் நூறு சதவீத உத்திரவாதமான நகைச்சுவை படத்தை அவரால் ரசிகர்களுக்கு கொடுக்க முடிகிறது என்கிறார்கள்.. குறிப்பாக வளர்ந்து வரும் காமெடியன்களை சீனியர் ஜூனியர் பாகுபாடு பார்க்காமல் தனது படங்களில் இணைத்துக்கொள்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார் திலீப்.
கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த படங்களை பார்த்தால் அது நன்றாகவே தெரியும்.. 'த்ரிஷ்யம்' மூலம் ஓரளவு ரசிகர்களுக்கு அறிமுகமான கலாபவன் ஷாஜனுக்கு தனது 'ரிங் மாஸ்டர்' படத்தில் நண்பனாக படம் முழுவதும் வரும் ரோலை கொடுக்க செய்தார். அது நராகவே ஒர்க் அவுட் ஆனது.. கடந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான '2 கண்ட்ரீஸ்' படத்தில் இளம் காமெடி நடிகரான அஜூ வர்கீஸை உடன் இணைத்துக்கொண்டார்.. தியேட்டர்களில் விசில் பறந்தது..
இதோ இப்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'கிங் லையர்' படத்தில் இப்போதுதான் வளர்ந்து வரும் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துவரும் பாலு வர்கீஸை தனக்கு நண்பனாக படம் முழுவதும் வரும்படி வாய்ப்பு வழங்கி இருந்தார்.. இருவரும் சேர்ந்து காட்சிக்கு காட்சி அதகளம் பண்ணியிருக்கிறார்கள். இந்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் அனைத்தும் இயக்குனர்களின் வடிவமைப்பு என்றாலும் இவர்களுக்கு நிறைய ஸ்பேஸ் கொடுக்கும் பெருந்தன்மை திலீப்பைத்தானே சேரும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.