தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மதயானைக்கூட்டம் படத்தில் கதிரின் அண்ணனாக நடித்திருந்த கலையரசன், மெட்ராஸ் படத்தில் கார்த்தியின் நண்பராக நடித்தார். அவரது கேரக்டரும் வெயிட்டாக இருந்ததால் அந்த படம் அவரை பேச வைத்தது. அதனால் அடுத்தபடியாக கிடுகிடுவென்று பல படங்களில் அவரை ஹீரோ வேடத்துக்காக புக் பண்ணினார்கள். அந்த வகையில், அரை டஜன் படங்களுக்கு மேல் ஒப்பந்தமானார். இதில் ரஜினியின் கபாலி படமும் ஒன்று. இந்த படத்தில் அவருக்கு சிறிய ரோல்தான் என்றாலும், மெட்ராஸ் படத்தை மனதில் கொண்டு கலையரசனுக்கு மீடியாக்கள் பெரிய அளவில் பப்ளிசிட்டி கொடுத்தன.
அதனால் அவர் நடித்த படங்களும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. ஆனால், அப்படி வெளியான உருமீன், டார்லிங்-2 போன்ற படங்கள் இரண்டுமே அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் கைவசம் பல படங்கள் இருந்தபோதும் மனதளவில் கலவரமடைந்திருக்கிறார் கலையரசன். காரணம், இந்த படங்கள் வெளியான பிறகு அவரை வைத்து பெரிய செலவு செய்து படப்பிடிப்பு நடத்தியவர்கள் இப்போது ஒருவேளை படங்கள் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகவில்லை என்றால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதிருக்குமே என்று செலவை குறைக்கிறார்களாம். அதனால் அடுத்து தான் ஹீரோவாக நடித்துள்ள ராஜாமந்திரி, காலக்கூத்து, சைனா, பட்டினப்பாக்கம் ஆகிய படங்களில் ஒன்றிரண்டாவது வெற்றி பெற்று தனது ஹீரோ மார்க்கெட்டை காப்பாற்றுமா? என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார் கலையரசன்.