ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஷங்கரிடம் தொழில் கற்று இயக்குநரான அட்லியின் முதல் படம் 'ராஜா ராணி'. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் ஆகியோர் நடித்து வெளியான ராஜா ராணி படம் வெளியானபோது அப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்தது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 40 நிமிடங்கள். அதே ஃபார்முலாவை தன்னுடைய இரண்டாவது படத்திலும் பின்பற்றியிருக்கிறார் அட்லி.
அதாவது, தற்போது விஜய்யை கதாநாயகனாக வைத்து அட்லி இயக்கியிருக்கும் இரண்டாவது படமான 'தெறி' படத்தின் ரன்னிங் டைம் முந்தைய படத்தைவிட இரண்டு நிமிடங்கள் குறைவாக 2 மணி 38 நிமிடங்களில் உருவாக்கி இருக்கிறார். ராஜாராணி படத்தைப் போலவே இப்படத்திற்கும் சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
தன் முதல் படத்தின் வெற்றி ஃபார்முலாவையே இரண்டாவது படத்திற்கும் பயன்படுத்தியிருக்கும் அட்லி, தெறி படத்தின் டீஸருக்கு 1 கோடிக்கும் மேற்பட்ட யு டியூப் பார்வையிடல்களும், 3 லட்சத்திற்கு மேற்பட்ட லைக்குகளும் கிடைத்திருப்பதை 'தெறி' படத்துக்குக் கிடைத்த பாசிட்டிவ் வைப்ரேஷன்களாக எண்ணி சந்தோஷத்தோடு இருக்கிறார் அட்லி.