ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த வடிவேலு, இப்போது மீண்டும் காமெடி டிராக்கிற்கு திரும்பியுள்ளார். முதல்கட்டமாக விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் காமெடி செய்ய இருக்கிறார் வடிவேலு.
'ஜெயம்' ரவி, ஹன்சிகா நடித்து வெற்றிபெற்ற 'ரோமியோ ஜூலியட்' படத்தை தயாரித்த 'மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்' பட நிறுவனம் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் 'வீரசிவாஜி' படத்தை தயாரித்து வருகிறது.
விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் 'கத்திச்சண்டை' என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். கத்திச்சண்டை படத்தில் விஷாலுடன் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். இப்படத்தில் காமெடி டிராக் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனாலேயே வடிவேலுவை நடிக்க வைக்கின்றனர். ஏற்கனவே 'திமிரு' படத்தில் விஷால், வடிவேலு இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் இணைகின்றனர்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஏற்கெனவே 'தலைநகரம்', 'மருதமலை' ஆகிய படங்களில் நடித்துள்ளார் வடிவேலு, அந்தப்படங்களின் காமெடியெல்லாம் பெரிய அளவில் ரீச்சானது என்பது குறிப்பிடத்தக்கது.