அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கேரளாவைச் சேர்ந்த அசின் , தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு இந்தியிலும் நடித்து பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அசின் மீண்டும் நடிக்க இருக்கிறார், அவர் நடிப்பதற்கு கணவர் தடை விதிக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியானது.
இதனை மறுத்து அசின் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னை பற்றி கற்பனையான செய்திகள் பரவி வருகிறது. நான் திருமணத்துக்கு முன்பே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன். நடித்துக் கொண்டிருந்த படங்களை முடித்து கொடுத்துவிட்டேன். விளம்பர படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டேன். நான் நடித்த விளம்பர படங்களின் ஒப்பந்த காலமும் முடிந்து வருகிறது. இனி சினிமாவிலோ, விளம்பரங்களிலோ நடிக்க மாட்டேன். இவ்வாறு அசின் அதில் குறிப்பிட்டுள்ளார்.