விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தனுஷ், நயன்தாரா இருவரும் இதுவரை நடித்த படங்களில் அவர்களுடைய நடிப்பில் 'தி பெஸ்ட்' என்று சொல்லக் கூடிய படங்களில் ஒன்றுதான் 'யாரடி நீ மோகினி'. தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஆடவாரி மாடலுக்கு அர்தாலே வேறுலே' என்ற படத்தின் ரீமேக்தான் தமிழில் 'யாரடி நீ மோகனி' யாக வெளிவந்தது.
தனுஷ், நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்த இந்தப் படம் ஒரு சராசரி இளைஞனின் அழுகை, காதல், குறும்பு, பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் படமாக அமைந்தது. படம் பார்த்த பல இளைஞர்களும் தங்களை திரையில் தனுஷாகவே பார்த்து ரசித்தனர். நயன்தாராவை இந்த அளவிற்கு இதற்கு முன் யாராவது காட்டியிருப்பார்களா என்று சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் நயன்தாரா மிகவும் அழகாக இருந்தார்.
நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகன், நயன்தாராவின் முறைப் பையனாக நடித்த கார்த்திக் குமார், தனுஷ் நண்பனாக நடித்த கருணாஸ், தனுஷ் அப்பாவாக நடித்த ரகுவரன், நயன்தாராவின் தாத்தாவாக நடித்த கே.விஸ்வநாத் இப்படி படத்தில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்த படம் இது. ரகுவரன் நடித்து கடைசியாக வெளிவந்த படம் இதுதான்.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களுமே இனிமையாக அமைந்தது. 'பாலக்காட்டுப் பக்கத்திலே...' என்ற ரீமிக்ஸ் பாடலுக்கு மட்டும் டி.இமான் இசையமைத்திருந்தார். மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படம் 2008ம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.