Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஜோடி சேரும் ஆர்யா-நயன்தாரா!

05 ஏப், 2016 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Arya---Nayanthara-to-team-up-again

நான் கடவுளுக்குப்பிறகு பல தோல்வி படங்களை கொடுத்து வந்த ஆர்யாவுக்கு நயன்தாராவுடன் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதேபோல் அதன்பிறகு மீண்டும் அவருடன் இணைந்த ராஜா ராணி படமும் ஹிட்டாக அமைந்தது. அதனால் அதையடுத்து தான் நடித்த சில படங்கள் சறுக்கியபோது நயன்தாராவுடன் ஜோடி சேர ஆசைப்பட்டார் ஆர்யா. ஆனால் அது ஒர்க்அவுட்டாகவில்லை. கைவசம் பல படங்கள் வைத்திருந்த நயன்தாரா தனது இயலாமையை தெரிவித்தார். அதனால்தான் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைத்தார் ஆர்யா.


இந்த நிலையில், தற்போது ஆர்யாவினால் இயலாத அந்த காரியம் நடிகை குஷ்புவினால் கைகூடி வந்திருக்கிறது. அதாவது குஷ்பு தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் கலகலப்பு-2 படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை புக் பண்ணியிருக்கிறார்களாம். கலகலப்பு படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா என இரண்டு ஜோடி நடித்த கதையை இப்போது சிங்கிள் ஜோடி கதையாக மாற்றியிருக்கிறாராம் சுந்தர்.சி. இந்த படமும் முதல் பாகத் தைப்போலவே காமெடி கதையில்தான் உருவாகிறதாம். அதனால் ஆர்யா-நயன் தாரா கூட்டணியோடு சூரி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட சில மெகா காமெடியன்களும் இணைகிறார்களாம். மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in