ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு பிசியாகி விட்டார் சிபிராஜ். தற்போது ஜாக்சன் துரை என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.
இதற்கு இடையில் சிபிராஜ் வில்லனாக நடித்த போக்கிரிராஜா படம் சரியாக போகாததில் வருத்ததில் இருக்கும் சிபிராஜ் அடுத்து காமெடி படத்தை தயாரித்து அதில் நடிக்க இருக்கிறார். வல்லினம் அறிவழகனின் உதவியாளர் மணிகண்டன் இயக்குகிறார். சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சூதுகவ்வும் பாணியிலான பிளாக் காமெடி படம். நடிகனாக ஜெயிக்க சிபிராஜ் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.