திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் தமிழுக்கு வந்தவர் கிரண். முதல் படத்திலேயே கவர்ச்சி சூறாவளியாய் விசிறியடித்த அவர், அதையடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர், திருமலை, என பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்து விடவே, கேரக்டர் நடிகையாக உருவெடுத்த கிரண், சகுனி, ஆம்பள போன்ற வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தவர் இப்போது குண்டு கத்தரிக்காய், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த சர்வர் சுந்தரம் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி ஷாண்டிலியா நடிக்க, கிரணுக்கு முக்கியமான காமெடி வேடத்தில் நடிக்கிறாராம். இதற்கு முன்பு பெரும்பாலும் கவர்ச்சிகரமாகவே நடித்து வந்த கிரணுக்கு சமீபகாலமாக காமெடி வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதால் அதிக ஈடுபாடு காட்டி நடிக்கிறாராம். அதனால் அவரது கேரக்டரை டைரக்டரிடம் சொல்லி பெருசுபடுத்தி விட்டாராம் சந்தானம்.