Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோர்ட்டில் தலைகுனிந்த பிரபுதேவா! சொத்து கிடைத்த சந்தோஷத்தில் ரமலத்!!

03 ஜூலை, 2011 - 11:30 IST
எழுத்தின் அளவு:

விவாகரத்து வழக்கு விசாரணைக்காக சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு வந்த பிரபுதேவா தலைகுனிந்தபடி இருந்தார். அவரது காதல் மனைவி ரமலத் சொத்து கிடைத்த சந்தோஷத்தில் இருந்தார். நயன்தாராவுடனான காதலுக்கு பிறகு, ரமலத்தை முறைப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்த பிரபுதேவாவுக்கு முதலில் முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். என் கணவரை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்றெல்லாம் போர்கொடி தூக்கினார். பின்னர் நடத்தப்பட்ட பேரத்தில், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை ரமலத் பெயருக்கும், குழந்தைகள் பெயருக்கும் கொடுக்க பிரபுதேவா சம்மதித்ததைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு செய்தனர். இந்த வழக்கு சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. 6 மாத கால அவகாசத்திற்கு பிறகு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரபுதேவாவும், ரமலத்தும் தனித்தனி கார்களில் கோர்ட்டுக்கு வந்தனர். உள்ளே சென்றபோதும், வெளியே வந்தபோதும் பிரபுதேவா தலைகுனிந்தபடியே இருந்தார். ரமலத் கோர்ட் வளாகத்துக்குள் வந்தபோது 15 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய கணவனிடம் இருந்து பிரியப் போகிறோமே... என்ற வருத்தம் துளியும் இல்லாமல் இருந்தார். பின்னர் பிரபுதேவாவுடன் சிரித்து பேசினார். கோர்ட்டில் ரமலத்துக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டபடி 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் கொடுப்பதற்கான ஆவணங்களை பிரபுதேவா தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ரமலத் சந்தோஷமாக காணப்பட்டார்.

ரமலத்தின் வக்கீல் பி.ஆனந்தன் அளித்த பேட்டியில், பிரபுதேவாவும், ரமலத்தும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். பிரபுதேவா வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டியது இருப்பதால் முன்கூட்டியே விசாரணை நடத்துமாறு கோர்ட்டில் மனு செய்தார். அதன்படி, இன்று விசாரணை நடத்தப்பட்டது. பிரபுதேவாவும் ரமலத்தும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். தனது குழந்தைகளின் பராமரிப்புக்காக ரமலத்திற்கு வழங்குவதாக இருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களையும் பிரபுதேவா சமர்ப்பித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது, என்றார்.

ஒப்படைக்க வேண்டிய சொத்துக்களை பிரபுதேவா ஒப்படைத்து விட்டதால் ரமலத்துடனான விவாகரத்துக்கு பிரச்னை இல்லை என்று வக்கீல்கள் பேசிக் கொண்டனர்.

Advertisement
கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை! ஆட்டோகிராப் மல்லிகா பளீச்!!கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை! ... பட அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி: சன் பட அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி: சன் ...


வாசகர் கருத்து (19)

06 ஜூலை, 2011 - 16:24 Report Abuse
 பெண்ணால் கெட்ட கஞ்சமாலை "தறுதலையின் கேனயாட்டம்" இப்பிடி ஒரு படம் பிரபுவ வச்சு இயக்கலாம்னு இருக்கேன்..என்ன பிரபு சார் நீங்க தான் இந்த கதைக்கு
Rate this:
குமார் - Mumbai,இந்தியா
04 ஜூலை, 2011 - 14:54 Report Abuse
 குமார் இந்த டீலு எனக்கு ரொம்ப பிடுசுருக்கு ....
Rate this:
சிவா - madurai,இந்தியா
04 ஜூலை, 2011 - 13:13 Report Abuse
 சிவா ஆல் தி பெஸ்ட் பிரபுதேவா
Rate this:
சாவடி ஆண் - mendalpen kurukku theru,இந்தியா
04 ஜூலை, 2011 - 11:13 Report Abuse
 சாவடி ஆண் சினிமாவை வாழ்க்கையாக பார்க்காமல் வெறும் பொழுது போக்காய் பார்த்து அதில் உள்ள நல்லது கெட்டதுகளை அலசி கருத்து எழுதுறோம்.உங்களுக்கு இஷ்டம் இல்லேன போய்கிட்டே இருங்க..
Rate this:
csj - chennai,இந்தியா
04 ஜூலை, 2011 - 10:33 Report Abuse
 csj 15 வருஷம் வாழ்கை நடத்தி வேறு பெண்ணுடன் தன குசந்தைகளை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் செல்பவரி பார்த்து சிரிக்க வேண்டும் என்பதே பாரதி கண்ட புதுமைபெண் .
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mersal
  • மெர்சல்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film thirupathisamy kudumbam

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in