'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சுமார் 75 படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் ஜெயபிரகாஷ். இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. மாயக்கண்ணாடி படத்தில் நடிகரானவர், பாண்டிராஜின் பசங்க படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்து பேசப்படும் நடிகரானார். இந்த நிலையில், அதையடுத்து பாசிட்டீவ், நெகடீவ் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வந்த அவர் தற்போது கட்டம் போட்ட சட்டை -என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஜெயப்பிரகாஷ் ஒரு வித்தியாசமான மைனர் வேடத்தில் நடித்திருக்கிறார். அதாவது ஊருக்குள் ரொம்ப நல்லவர் போன்று வாழ்ந்த அவர், ரகசியமான முறையில் 5 பெண்களை திருமணம் செய்து கொண்டு கணவராக வாழ்ந்து வருவாராம். ஆனால் ஒருநாள் அவர் திடீரென்று இறந்து விடும்போது, அந்த 5 ரகசிய மனைவிகளும் தங்களது பிள்ளைகளுடன் வந்து சொத்தில் பங்கு கேட்டு அவரது பிணத்தை தூக்க விடாமல் தடுத்து நிறுத்தி விடுவார்களாம். இப்படியொரு காமெடி கலந்த கதையில் உருவாகியிருக்கும் கட்டம் போட்ட சட்டை படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடித்திருக்கும் ஜெயபிரகாஷ், ஊருக்குள் மைனராக சுற்றும் காட்சிகளில் தன்னை இளவட்டமாக மாற்றி நடித்திருக்கிறாராம்.