பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வம்சி இயக்கத்தில் நாகார்ஜூன், கார்த்தி, தமன்னா நடித்த தோழா திரைப்படம் மார்ச் 25-ல் வெளியானது. வினோத் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருந்தார். பி.வி.பி சினிமாஸ் படநிறுவனம் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்தப்படம் தயாரிப்புநிலையில் இருந்தபோது தெலுங்கிலும் சரி... தமிழிலும் சரி இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க எந்தவொரு சேனலும் முன் வரவில்லை.
தற்போது படம் வெற்றியடைந்தவிட்டதால் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. தெலுங்குப் பதிப்பான ஊபிரியின் சாட்டிலைட் ரைட்ஸ் 7 கோடிக்கு விலை போயிருக்கிறது. தோழா படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை பிரபல தனியார் சேனல் வாங்க ஆர்வம் காட்டியது. 9 கோடி என்று விலை சொன்னதாம் பிவிபி நிறுவனம்.
கார்த்தி படத்துக்கு 9 கோடி அதிகம் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாம் அந்த சேனல். அதிகபட்சமாக 5 கோடிக்கு ஆஃபர்கள் வந்து கொண்டிருக்கிறதாம்.