ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் வாரிசு சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் விழிப்புடன் இருப்பவர். சோனாக்ஷி எப்போதும் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார், போட்டோக்களை பதிவிடுவார், தன் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் உடனுக்கு உடன் தெரிவிப்பார். இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் சோனாக்ஷியை பேஸ்புக் போன்றவற்றை பாலோ செய்கின்றனர். இதில், சோனாக்ஷியின் பேஸ்புக்கை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 21 மில்லியனை தொட்டுள்ளது. இதனால் சோனாக்ஷியை சமூகவலைதள ராணி என்று அனைவரும் வர்ணிக்கிறார்கள். தற்போது சோனாக்ஷி, அகிரா மற்றும் போர்ஸ்2 படங்களில் நடித்து வருகிறார்.