பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் வகையில் முதல்கட்டமாக பிரமாண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் நடிகர்கள் 8 அணிகளாக பிரிந்து விளையாடுகிறார்கள். முன்னணி நடிகைகள் தூதுவர்களாக வந்து கேலரியை அலங்கரிக்கிறர்கள். ரஜனி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள்.
இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மூலம் 13 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். சேர்ட்லைட் உரிமம், டிக்கெட் விற்பனை நன்கொடை மூலம் இந்த நிதி திரட்டப்படுகிறது. நிதி திரட்டுவது, நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஆலோசிக்க நாளை சென்னை டி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர், நடிகைகள் குவிகிறார்கள். இந்த கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்படுவதோடு, அணியின் கேப்டன்கள், அவர்களுக்கு கீழ் விளையாடுகிறவர்களும் தீர்மானிக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வருகிறது.