Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பி.சுசீலாவின் சாதனை இந்தியாவின் பெருமை: வைரமுத்து

01 ஏப், 2016 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Vairamuthu-praises-P.Susheela

பின்னணி பாடகி பி.சுசீலா உலகிலேயே அதிக தனிப் பாடல்களை பாடியவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன பாடலாசிரியர் வைரமுத்து அவருக்கு சூட்டிய புகழாரம் வருமாறு...


17,695 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசீலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசீலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.


எத்தனை மொழிகளில் பாடினாலும், அத்தனை மொழிகளிலும் துல்லியம், அழகு, மேன்னை முன்றையும் கொண்டு வரும் ஆற்றல் பாடகி பி.சுசீலா அம்மையாருக்கு உண்டு. நம் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாய்மொழிதான் உண்டு, ஆனால் பாடகி பி.சுசீலா அம்மையாருக்கு 7 தாய்மொழிகள். அவை தெலுங்கு, தமிழ், மலையாளம்,கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா. 7 மொழிகளை தாய் மொழிகளாக கொண்டதை போல் பாடுபவர் பாடகி பி.சுசீலா அம்மையார் அவர்கள்.


1953ல் தனது முதல் பாடலை பாடினார், அந்த ஆண்டு தான் நான் பிறந்தேன். இதற்கு என்ன காரணம் என்றால், என்னை போன்றவர்களுக்கு அவர் பாடிய பாட்டுதான் தாலாட்டாக இருக்க வேண்டும் என்று காலம் விதித்திருக்கிறது. அவரது தமிழ் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. உதாரணத்திற்கு, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாட்டில் சொற்களை மட்டும் அல்ல, ஒலிக்குறிப்பை கூட பாடியிருக்கிறார், விசும்பலை பாடியிருக்கிறார்.


எனக்கும் மிகவும் பிடித்த "என்னை நினைத்து என்னை அழைத்தாயோ" என்ற பாடல், படத்தோடு பார்க்கையில் கண்ணீர் வரும், அப்படியென்றால நடித்தவர்கள் அழ வைக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த பாட்டை செவியில் கேட்டாலும் அழுகை வரும், அப்படியென்றால் சுசீலா நம்மை அழ வைக்கிறார் என்று அர்த்தம். அப்படியெல்லாம் இந்த மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசீலா அம்மையார் அவர்கள்.


பாடகி சுசீலா அம்மையாரின் வரலாறு மிகப் பெரிது, 1950களில் பாட வந்தவர் சுசீலா. பல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், ரசிகர்கள், தலைமுறைகள் என அனைத்து மாறி இருக்கிறது. இத்தனையும் தாண்டி முன்று தலைமுறைக்கு தனது இசை பங்களிப்பை செய்தவர் சுசீலா அம்மையார். இசை என்பது பயிற்சியால் வந்துவிடும், குரல் என்பது இயற்கையின் கொடை. அந்த இயற்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் பயன்படுத்தி இருக்கிறார்.


இவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரை துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரை காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளை தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசீலா அம்மையாரின் குரல். இவரது குரல் இந்த சமுகத்திற்கு செய்த பணி மிகப்பெரியது. இவரின் குரலால் காற்று தன்னைத்தானே தாலாட்டிக்கொண்டு தூங்கவைத்துக் கொள்கிறது என்று சொல்ல வேண்டும். சுசீலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்து கொள்கிறேன்.


இவ்வாறு பி.சுசீலாவுக்கு வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நிகிஷாவை கைதூக்கி விடுவாரா நாரதன்நிகிஷாவை கைதூக்கி விடுவாரா நாரதன் தோழாவுக்கு பிரான்ஸ் பட நிறுவனம் பாராட்டு தோழாவுக்கு பிரான்ஸ் பட நிறுவனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

dheena - chennai  ( Posted via: Dinamalar Android App )
02 ஏப், 2016 - 11:06 Report Abuse
dheena congratulations mam .
Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
01 ஏப், 2016 - 13:42 Report Abuse
A shanmugam பி சுசீலா amaiyaarai போற்றி புகழ்ந்தால் மட்டும் போதாது. அம்மையாருக்கு தமிழ் நாட்டில் "வெண்கல" சிலை வைக்கவேண்டும். அதே போல் TMS அய்யாவுக்கும் தமிழ் நாட்டில் அவர் பாடிய பாடலுக்கும், துய தமிழ் உச்சரிப்புக்கும், தமிழ் நடிகன்,நடிகைகள் குரலுக்கு ஏற்றால் போல் பாடிய தெயவபாடகர் திரு TMS ஆவார்கள். அவருடைய புகழ் இந்த மண்ணில் என்றும் நிலைத்திருக்க " மணி மண்டபம்" சென்னையில் கட்டவேண்டும். நடிகர் சங்கமாவது முன் நின்று செயல்படவேண்டும். இதுதான் நாம் தெய்வபாடகர் திரு TMs அய்யாவுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in