இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை ஹன்சிகா. அதையடுத்து, ஜெயம்ரவியின் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்து வந்த வேகத்திலேயே தமிழில் மார்க்கெட்டை பிடித்தார் ஹன்சிகா. அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்து வந்த ஹன்சிகா, முதன்முறையாக உயிரே உயிரே படத்தில் ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதன்பிறகு ஜெயம்ரவியுடன் போகன், உதயநிதியுடன் மனிதன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஹன்சிகா பக்கம் திரும்புவதாக தெரியவில்லை. அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தால் இருக்கிற மார்க்கெட்டும் சரிந்து விடும் என்பதால், உயிரே உயிரே படத்தைத் தொடர்ந்து நல்ல வேடம் கிடைத்தால் இளம் ஹீரோக்களுடனும் நடிப்பேன் என்று ஹன்சிகா ஒரு செய்தியை கோலிவுட்டில் வெளியிட்டிருப்பதாக ஒரு தகவல் . அதோடு, பட்ஜெட்டுகளுக்கேற்ப சம்பளத்தையும் குறைக்கவும் தயாராகியிருக்கிறாராம் ஹன்சிகா.