Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்

31 மார், 2016 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Tamil-actress-did-not-get-chance-:-Aishwaryarajesh-feeling

ஐஸ்வர்யரா ராஜேஷ் நடித்துள்ள ஹலோ நான் பேய் பேசுறேன் படம் வருகிற ஏப்ரல் 1ந் தேதி வெளிவருகிறது. அவ்னி சினி மேக்கர்ஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்துள்ளார். வைபவ், ஓவியா, விடிவி கணேஷ், கருணாகரன், நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:


எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் பாஸ்கர் சாருக்கு நன்றி. தமிழ் பேசி நடிக்கும் நடிகை என்பதால் என்னை தேர்வு செய்தார். தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே அவ்வளவாக வாய்ப்பு தருவதில்லை. இந்த வகையில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன். ஹலோ நான் பேய்பேசுறேன் படம் நல்லதொரு பொழுதுபோக்குப் படம். எல்லாமும் இதில் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சிரிப்பை வரவழைப்பவை. நடித்த போதே எங்களுக்குச் சிரிப்பு வந்தது. இதில் நான் விடிவி கணேஷின் சகோதரியாக நடித்திருக்கிறேன்.


நான் இதுவரை சரியானபடி நடனம் ஆடி நடித்ததில்லை. இதில் சிரமப்பட்டு ஆடியிருக்கிறேன். சில்லாக்கி டும்மா பாடலில் பிணத்தின் மீது எல்லாம் ஏறி நடனம் ஆடியிருக்கிறேன். எனக்கு ஜோடி வைபவ். படத்தில் அது புதிதாகத் தெரியும். இதில் நாங்கள் ஆடும் சாவுக்குத்து பக்கா லோக்கலாக இருக்கும், அது பேசப்படும். இது ஒரு நல்ல அனுபவம். என்றார்.


Advertisement
'6' அனுபவங்களை வைத்து அடுத்த படம்... ஷாம் திட்டம்'6' அனுபவங்களை வைத்து அடுத்த படம்... ... பேய்களை பயப்பட வைக்கும் 'தில்லுக்கு துட்டு' பேய்களை பயப்பட வைக்கும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா
    Tamil New Film Mersal
    • மெர்சல்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :அட்லீ

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in