இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் கடந்த வாரம் வெளியான படம் தோழா. இரண்டு மொழிகளிலும் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்பும் கிடைத்தது. அதனால், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் படத்திற்கு வசூல் கிடைத்து வருகிறது. இப்படம் பற்றி கேள்விப்பட்ட பிரபல ஹிந்தி இயக்குனரான கரண் ஜோஹர் ஹிந்தி ரீமேக் உரிமையை மிகப் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய சொந்தப் பட நிறுவனத்தில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
படத்தை தமிழ், தெலுங்குப் படங்களை இயக்கிய வம்சியையே இயக்க வைக்கலாம் என கரண் ஜோஹர் முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள். ஆனால், ஹிந்தியில் நாகார்ஜுனா கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று குழப்பத்தில் உள்ளார்களாம். சீனியர் ஹீரோ யாராவது அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால்தான் நன்றாக இருக்கும். இருந்தாலும் படம் முழுவதும் சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து நடிக்க எந்த ஹீரோ தைரியமான முன்வருவார்கள் என்பது தெரியவில்லை.
இரண்டு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்த ஒரு படம் ஹிந்தியிலும் சரியான நட்சத்திரத் தேர்வுடன் இருந்தால் வெற்றி பெறுவது நிச்சயம்.