Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெற்றி பெறுவது ரொம்ப எளிது; தோல்வியை எதிர்கொள்வது தான் கடினம்: ஷாம்

31 மார், 2016 - 00:20 IST
எழுத்தின் அளவு:
Its-hard-to-face-defeat:-Sham

தமிழ் சினிமாவில் 'சாக்லேட் ஹீரோ'வாக அறிமுகமான ஷாம், தொடர் தோல்விகளால் தடுமாறி, நடிப்புத் துறையிலிருந்து, சற்று ஒதுங்கிஇருந்தார். புறம்போக்கு படத்தில் கிடைத்த பாராட்டு, அவரை, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த வைத்துள்ளது. அவருடன் ஒரு சந்திப்பு.


சினிமாவில் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?


லேசா லேசா, உள்ளம் கேட்குமே என, பெரும்பாலும் காதல் சார்ந்த படங்கள் தான், தமிழில் எனக்கு கிடைத்தன. தெலுங்கு பக்கம் சென்றபோது, ஒரு மாறுதலாக, போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின், தமிழிலும் வித்தியாசமான வேடங்கள் கிடைத்தன. சினிமாவுக்கு வந்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன. சினிமாவை பொறுத்தவரை, ஒரே நாளில் பெயர் எடுத்து, பெரிய ஆளாக, 'செட்டில்' ஆகி விட முடியாது. திறமை இருந்தால், கண்டிப்பாக ஜெயிக்கலாம்.


உங்களுடன் அறிமுகமான பலர், உங்களை விட, உயரத்துக்கு போயிட்டாங்களே?


அசின், த்ரிஷா, ஆர்யா போன்றவர்கள் எல்லாம், என்னுடன் அறிமுகமானவர்கள் தான். அவர்கள் அளவுக்கு நான் பிரபலமாகவில்லை என்பது உண்மை தான். இதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்துள்ளேன். நம்முடைய பாதையும், பயணமும் சரியாக இருக்க வேண்டும்; அதுதான் முக்கியம். நடிகனாக வந்தேன். இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளேன். விரைவில் படம் இயக்கும் எண்ணமும் உள்ளது.


உங்களுக்கு வழிகாட்டிய இயக்குனர்கள்?


ஜீவா சார், என் மேல் நம்பிக்கை வைத்து, 'உன்னால் முடியும்' என, என் கையை பிடித்து அழைத்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக, என்னை சரியாக பயன்படுத்த தெரிந்த இயக்குனர் ஜனா. புறம்போக்கு படம் வெளியானதும், என்னை நிறைய பேர் பாராட்டினர். ஜனா போன்ற இயக்குனர்களைத் தான், தேடுகிறேன்.


சினிமாவுக்கு வரும்போதே, 'சிக்ஸ் பேக்' எல்லாம் வைத்திருந்தீர்கள்; ஆனால், அதை சினிமாவில் சரியாக பயன்படுத்தவில்லையே ஏன்?


சினிமாவுக்கு வரும்முன், மாடலிங் துறையில் இருந்தேன். அங்கே, ஸ்டைலாக நடக்க வேண்டும்; உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டும். இதற்காக, 'சிக்ஸ் பேக்' வைத்திருந்தேன். ஆனால், சினிமாவுக்கு வந்ததும், ஜீவா சார் வேண்டுகோளை ஏற்று, உடம்பை குறைத்தேன். ஜிம்முக்கு போவதையும் தவிர்த்தேன். இப்போது, காவியன் என்ற படத்தில், ஆக் ஷன் ரோலில் நடிக்கிறேன். அதில், 'சிக்ஸ் பேக்'குடன் நடிக்கிறேன்.


வெற்றி, தோல்வியை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?


வெற்றி பெறுவது ரொம்ப ஈசி. நம்மை சுற்றி இருப்பவர்கள் பாராட்டுவர். ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால், தோல்வியை எதிர்கொள்வது, ரொம்ப சிரமம். அதை கடந்து போவது, கஷ்டம். என்னை பொறுத்தவரை, தோல்வியின் மூலம், நாம் புதிதாக பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். எவ்வளவு அடிபட்டாலும், தோல்வியை சந்தித்தாலும், வெற்றியை அடைவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.


சினிமா துறையில் உங்கள் நண்பர்கள்?


விஷால், ஆர்யா, ஜீவா, விஷ்ணு, ஸ்ரீகாந்த் துவங்கி, இப்போது வந்திருக்கும் கலையரசன் வரை, எனக்குள் நல்ல நட்பு உருவாகிஉள்ளது. நாங்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியும் இதற்கு காரணம். விழாக்கள், பிறந்த நாள் சந்திப்புகள் என, நட்பு வட்டாரம், சுவாரசியமாக இருக்கிறது.


ஒரு மெல்லிய கோடு படம் பற்றி ?


இந்த படத்தின் கதை, ரொம்ப புதிதாக இருக்கும். அர்ஜுன் சார் நடிச்சிருக்கார். ராஜா சார் இசை. மனிஷா கொய்ராலா எனக்கு ஜோடி. இந்த படத்தில், நான் ஹீரோவா, வில்லான என்பதை கண்டுபிடிக்கவே ரொம்ப நேரம் பிடிக்கும். உண்மை கதைகளை படமாக்கும் ரமேஷ், இதை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில், முதல் முறையாக, 50 லட்சம் ரூபாய் செலவில் வெளிநாட்டு மருத்துவ பரிசோதனை கூடம் ஒன்றை வடிவமைத்துள்ளோம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in