டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இரண்டாவது மகள் ஷ்ரீஜா, கல்யாண் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நேற்று(மார்ச் 28) நடைபெற்றது. இதில் மெகா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் 23 முதல் இத்திருமணத்திற்கான நிகழ்வுகள் துவங்கி விட்டன.
இத்திருமணம் மணமகள் அழைப்பு, மணமகன் அழைப்பு, மெகந்தி, சங்கீத் என ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெற்றுள்ளது. சிஞ்சீவியின் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். அல்லு அரவிந்த் தனது மகன் அல்லு அர்ஜுன் மற்றும் மருமகள் சினேகாவுடன் இணைந்து தனது வீட்டில் கடந்த வாரம் புதன் கிழமை ஷ்ரீஜா- கல்யாண் திருமணத்தின் முதல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
அடுத்த நாள் வியாழக்கிழமை நடிகர் சாய் தரண் தேஜ் இல்லத்தில் இத்திருமணத்தின் இரண்டாவது நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு இல்லத்தில் வெள்ளிக்கிழமை அடுத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஷ்ரீஜா-கல்யாண் ஜோடியின் சங்கீத் மற்றும் மெகந்தி நிகழ்ச்சிகள் ஷ்ரீஜாவின் சகோதரர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபசேனா இல்லத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்துள்ளது.
பின்னர் திங்கள் கிழமை பெங்களூரில் உள்ள சிரஞ்சீவியின் இல்லத்தில் ஷ்ரீஜா- கல்யாணின் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் மார்ச் 31 ஆம் தேதி ஐதரபாத்தில் உள்ள பார்க் ஹையாத் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் வட இந்திய மற்றும் தென்னிந்திய திரை பிரபலங்களுடன் அரசியல் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது ஷ்ரீஜாவின் இரண்டாவது திருமணம் ஆகும். ஷ்ரீஜா தனது கல்லூரி நண்பரான பரத்வாஜ் என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி 2007ல் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு மகளும் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷ்ரீஜா, பரத்வாஜை 2011ல் விவாகரத்து செய்து விட்டு பெற்றோருடன் வசித்து வந்தார். தற்போது தனது பள்ளித் தோழனனான கல்யாணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.