பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களின் வெற்றிக்குப்பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் புரூஸ்லி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பயன்டா இந்த கார்த்திக் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இதில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்ட அவர், விஜய்யின் தெறி படத்திற்கான இசை வேலைகளை முடித்ததும் ராஜேஷ்.எம் இயக்கும் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டிவனம் பகுதியில் நடைபெற்றபோது, ஒரு காட்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆர்.ஜே.பாலாஜி இருவரும் நடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாம். பெரிய அளவில் இல்லாமல் சிறிய காயங்களோடு தப்பினார்களாம். அதையடுத்து ஸ்பாட்டிலேயே அவர்களுக்கு முதலுதவி கொடுத்து மறுபடியும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்திருக்கிறது. இந்த தகவலை ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டரில், நல்லவேளை கவலைப்படும் படியாக ஏதும் இல்லை. நானும், ஜி.வியும் சிறிய காயங்களோடு தப்பினோம் என்று பதிவு செய்திருக்கிறார்.