மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
2016ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பெயர்களை குடியரசு தினத்தன்று மத்திய அரசு வெளியிட்டது. மறைந்த பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அனுபம்கர், அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை செயினா நெய்வால், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 112 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றனர்.
இவர்களில் 56 பேருக்கு, ஜனாதிபதி மாளிகையில் இன்று(மார்ச் 28ம் தேதி) பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பத்ம விருதுகளை விழங்கினார்.
இதில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், பத்மபூஷண் விருது பெற்றார். நடிகர் அஜய் தேவ்கனும், இயக்குநர் மதுர் பண்டர்கரும் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.