'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான அவந்திகா 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆதவா என்ற புதுமுகம் ஜோடியாக நடிக்கிறார். அழகுராஜ் என்ற புதுமுகம் இயக்குகிறார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், லியாண்டர் ஜீ இசை அமைக்கிறார். பிக் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இதன் துவக்க விழா எளிமையாக நடந்தது.
அப்போது படம் பற்றி இயக்குனர் அழகுராஜ் கூறியதாவது: இது காமெடி கலந்த ரொமாண்டிக் காதல் படம். காதலுக்கு எதிரியே காதலர்கள்தான் என்பது படத்தின் மைய கருத்து. சின்ன சின்ன விஷயங்களைகூட விட்டுக் கொடுக்காமல் ஊதி பெரிதாக்கி பிரிந்து சென்று விடுகிற அளவிற்கு செல்கிறவர்கள் காதலர்கள். சின்ன சின்ன விட்டுக் கொடுத்தலில்தான் காதல் வாழ்கிறது என்பதை காமெடி கலந்த காட்சிகளுடன் சொல்கிறோம். சென்னை, கோவை, மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடக்கிறது என்றார்.