தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். ஆட்டோகிராப், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், அந்நியன் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மாஸ்கோவின் காவிரி என்ற படத்தையும் இயக்கினார். அதன் பிறகு இந்திக்கு சென்ற ரவிவர்மன் அங்கு பார்பி, ராம்லீலா, உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
தற்போது ரவிவர்மா ஹாலிவுட்டுக்கு சென்று விட்டார். ஹார்ட் பீட் என்ற ஹாலிவுட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படம். ஸ்டெப் அப் என்ற நடனப்படத்தை எடுத்த டுயான் அட்லர் இயக்கி உள்ளார். ராம்லீலா படத்தின் மூலம் ரவிவர்மனுக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது. தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் பணியாற்ற ரவிவர்மன் முடிவு செய்துள்ளார்.