ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை தேவயானி தெலுங்கு படம் ஒன்றில் குணசித்திர வேடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. இயக்குனர் கொரட்டால சிவா இயக்கும் ஜனதா கேரேஜ் எனும் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நாயகனாகவும் சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு மனைவியாக நடிகை தேவயானி நடிப்பதாகக் கூறப்பட்டது.
தற்போது தேவயானி இப்படத்திலிருந்து விலகி விட்டதாகவும் நடிகை சுஹாசினி மணிரத்னம் இப்படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 80,90களில் நாயகியாக தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள சுஹாசினி லீடர் போன்ற சமீபத்திய தெலுங்கு படங்களில் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். தற்போது சுஹாசினி ஜுனியர் என்.டி.ஆரின் ஜனதா கேரேஜ் படத்தில் நடிக்கவுள்ளார். தேவயானி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகவில்லை.