'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
ஸ்வேதா மேனன் எப்போதுமே பரபரப்பான நடிகை. எந்த கேரக்டரையும் துணிச்சலுடன் நடிக்கும் நடிகை. தன் தலைப்பிரசவத்தையே நேரடியாக படம் பிடிக்க அனுமதித்தவர். அந்த காட்சி இடம்பெற்ற களிமண்ணு படம் அவர் துணிச்சலின் அடையாளம். பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்ட ஆளும் கட்சி எம்.பி.யை அங்கேயே கிழித்து தொங்கவிட்டவர்.
இப்போது அடுத்த அதிரடியை செய்ய இருக்கிறார். நாடக காலம் முதல் டிஜிட்டல் சினிமா வரை ஆண்கள்தான் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி முதல், பிரசாந்த் விஜய் வரை பெண் வேடமிடாத நடிகர்களே இல்லை. ஆனால் ஒரு பெண், ஆண் வேடமிட்டு நடித்ததில்லை. ஒரு சில காட்சிகளில் காமெடிக்காக நடித்திருக்கிறார்கள். பொம்மலாட்டம் படத்தில் ஒரு பெண் தன்னை தற்காத்துக்கொள்ள ஆணாக நடிப்பார். ஆனால் ஸ்வேதா மேனன் முழுமையான ஆணாக, 'நாவல் என்ன ஜுவல்' படத்தில் நடிக்கிறார்.
இந்திய தாய்க்கு ஈரானிய தந்தை'கும் பிறந்த ஈரானிய பெண்ணின் கதையாம். சூரு சூழ்நிலையில் அவர் ஆணாக மாறிவிட தன் பெண் இயல்புகளை கைவிட்டு முழுக்க ஆணாகவே மாறி வாழ்கிற கதை. மலையாளம் மற்று ஈரானிய மொழிகளில் இந்தப் படம் தயராகிறது.