ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புகழ் படத்திற்கு பிறகு கையில் வேறு படம் இல்லாமல் இருந்தார் ஜெய். அவர் நடித்து முடித்துள்ள தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் ஒரு பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறர்.
70எம்எம் என்ற நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண்பாலாஜி, கந்தவேல் ஆகியோருடன் இணைந்து சண்டை இயக்குனர் திலீப் சுப்பராயன் தயாரிக்கிறார். சினிஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். சரவணன் ஒளிப்பதிவு செய்கிறர்.
“இது 1989ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கிற கதை. இதில் ஜெய் மூன்று வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புகள் சென்னை மற்றும் கொடைக்கானலில் நடக்கிறது. ஹீரோயின் மற்றும் இசை அமைப்பாளர் தேர்வு நடந்து வருகிறது. பக்கத்து வீட்டு இளைஞன் சாப்ட் பாய் என ஜெய்க்கு இருக்கும் இமேஜை உடைக்கின்ற விதமாக இந்த படத்தில் அவரது கேரக்டர் இருக்கும்” என்கிறர் இயக்குனர் சினிஷ்.