மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெளியான படம் குயின். அப்படத்தை விகாஷ்பால் இயக்கியிருந்தார். சூப்பர் ஹிட்டான அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். அப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்த அவர், கங்கனா ரணாவத் ரோலில் நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நயன்தாராவை அணுகி வந்தார். அதோடு அந்த படத்தை ரேவதி இயக்க, சஹாசினி வசனம் எழுதுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மலையாள த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் அப்படத்தை பாபநாசம் என்ற பெயரில் சிறப்பாக இயக்கியனார். அதேபோல் குயின் படத்தையும் இந்தியில் இயக்கிய அதே இயக்குனர் தமிழிலும் இயக்கினால் சிறப்பாக இருக்கும் தயாரிப்பு தரப்பு யோசிக்கிறது. அதனால் குயின் டைரக்டரை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.