ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்திற்கு ரயில் என்று பெயர் வைத்து படமாக்கி வந்தனர். அதிகாரப்பூர்வமான டைட்டீல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி வந்தனர். இப்படத்தில், டில்லியில் இருந்து சென்னையை நோக்கி வரும் ஒரு ரயிலுக்குள் நடக்கும் கதைதான் இப்படம். இதில் தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கதைப்படி தனுஷ் கேன்டீனில் வேலை செய்யும் டீபாயாகவும், அதே ரயிலில் வரும் ஒரு நடிகையின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேசும் நடித்துள்ளனர். அப்போது சந்தித்துக்கொள்ளும் தனுஷ்-கீர்த்தி சுரேசுக்கிடையே காதல் மலர்வதும், ரயில் பயணத்தின்போது சந்திக்கும் சில பிரச்சினைகளும்தான் இந்த படம்.
மேலும், இந்த படத்தைப்பற்றி இதுவரை தனுஷ் தரப்பில் இருந்து எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. என்றபோதும் டைரக்டர் பிரபுசாலமன்தான் அவ்வப்போது செய்திகள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் அப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் பிரபுசாலமன். அந்த வகையில் அப்படத்துக்கு தொடரி என்று பெயர் வைத்திருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ளார். ரயில் என்பதின் சுத்தமான தமிழ் பெயர்தான் இந்த தொடரியாம். தொடரி படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.