ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வரும் திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. தமிழில் சிம்பு நடிக்கும் இப்படம் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் சஹசம் சுவாசக சாகிபோ என்ற பெயரில் உருவாகி வருகின்றது. மலையாள நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கிலும் நாயகியாக நடிக்கின்றார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெறும் தள்ளிப்போகாதே எனும் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இப்படத்தை மே 27 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
தமிழில் இப்படம் மே இறுதி வாரத்தில் வெளிவரும் என கூறப்பட்டு வந்த நிலையில் அன்றைய தினமே தெலுங்கிலும் இப்படம் திரைக்கு வரும் என தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பிகள் அனைத்தும் முடிந்து இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பு மட்டும் மீதம் இருகின்றதாம். இப்படத்தை தொடர்ந்து மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா நடித்து வருகின்றார்.