Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடுக்காட்டில் அழகிகளுடன் மன்சூரலிகான் குத்தாட்டம்

23 மார், 2016 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Mansoorali-khan-dance-with-dancers--in-forest

குரூப் டான்சராக இருந்து நடிகர் ஆனவர் மன்சூரலிகான். இப்போது மீண்டும் ஆட்டத்தை துவக்கி விட்டார். கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா என்ற படத்துக்கு 30 அழகிகளுடன் கொல்லி மலையில் குத்தாட்டம் போட்டார். 250 நடன கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த குத்துப்பாட்டு கொல்லி மலையில் ஒரு வாரம் படமாக்கப்பட்டது. தனது பெருத்த உடலை வைத்துக் கொண்டு மன்சூரலிகான் போட்ட குத்தாட்டம் யூனிட்டையே அதிர வைத்தது.


இந்தப் படத்தின் நாயகனாக பாடகர் மனோவின் மகன் ரித்தீஷ் நடிக்கிறார் ஸ்வாதி ஹீரோயின். கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், அனுமோகன், ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு பெரிய வேலையை வேலைவெட்டி இல்லாத இளைஞர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்களின் சொதப்பலால் அது என்கவுண்டர் வரைக்கும் கொண்டு வந்துவிடுகிறது. அதற்கு பயந்து காட்டுக்குள் ஓடும் அவர்களை போலீஸ் துரத்துகிறது. ஒரு சிறிய வேலை பெரிய பிரச்சினைகளை உண்டாக்குகிறது. அதனை காமெடியாக காட்டுகிற படம். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசை அமைக்கிறார். ரசாக்கான் என்ற புதுமுகம் இயக்குகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in