வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மாற்றான், அனேகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கேவி ஆனந்த் இயக்கும் படத்தை தயாரிக்கிறது கல்பாத்தி அகோரம் நிறுவனம். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் டி.ராஜேந்தர் காமெடியனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அப்படத்தில் டி.ராஜேந்தர் காமெடியனாக நடிப்பது பற்றி குறிப்பிடவில்லை. காரணம்... தான் காமெடியனாக நடிப்பதை வெளியே சொல்ல வேண்டாம் என்று கே.வி.ஆனந்த்திடம் கேட்டுக் கொண்டாராம் டி.ராஜேந்தர். அதனால்தான் இந்த விஷயத்தை அப்படியே அடக்கிவாசித்து வருகிறார்களாம்.
கே.விஆனந்த் படங்களுக்கு வழக்கமாக இரட்டை கதாசிரியர்கள் சுபாதான் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவார்கள். இந்தப்படத்தில் சுபா உடன் கபிலன் வைமுத்துவும் இணைந்துள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக யார் நடிப்பது என்று பேச்சு வந்தபோது, தமன்னாவை சிபாரிசு செய்துள்ளார் விஜய்சேதுபதி. தற்போது தமன்னாவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. சீனு ராமசாமி இயக்கி வரும் 'தர்மதுரை' படத்திலும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாதான் நடித்திருக்கிறார்.