Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பாரா?

22 மார், 2016 - 10:02 IST
எழுத்தின் அளவு:
Did-ARRahman-compose-music-for-GVPrakash-film.?

டார்லிங் படத்தின் மூலம் நடிகராக மாறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது பிசி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். ப்ரூஸ் லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு மற்றும் கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷ்குமாரின் நடிப்பில் தற்போது தயாராகி வருகிறது. இதில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது.


தற்போது டி.சிவா தயாரிப்பில், ராஜேஷ் எம். இயக்கும் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் கேடிபில்லா கில்லாடி ரங்கா -2 படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.


ஒளிப்பதிவாளரான ராஜீவ்மேனன் மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கினார். அதன் பிறகு விளம்பரப்படம் எடுப்பதில் பிசியாக இருந்த ராஜீவ் மேனன் குரு, கடல், கோச்சடையான் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். தற்போது ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராகி இருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ராஜீவ்மேனன் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என்று தகவல் அடிபடுகிறது. அதே நேரம் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நிச்சயம் இசையமைக்க மாட்டார் என்றும் சிலர் சொல்கிறார்கள். தமிழ் படங்கள் மட்டுமல்லாது பிறமொழி படங்களிலும் அவர் பிஸியாக இருப்பதாலும், ஏற்கனவே ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தினர் இடையே சில குடும்ப பிரச்னைகள் இருப்பதாலும் அவர் கண்டிப்பாக இசையமைக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in