Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலில் விருப்பம் இல்லை - டெல்லி கணேஷ்

19 மார், 2016 - 18:24 IST
எழுத்தின் அளவு:
I-am-not-interested-in-Politics-says-Delhi-Ganesh

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். குணச்சித்திரம், வில்லன், காமெடி என பலதரப்பட்ட ரோல்களில் நடித்த இவர், இப்போது தனது மகன் மகாவை கொண்டு 'என்னுள் ஆயிரம்' என்ற படத்தை தயாரித்துள்ளார். விரைவில் ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது மும்முரமாய் நடந்து வருகிறது. சமீபகாலமாக விசு, விஜயகுமார் போன்ற நடிகர்கள் எல்லாம் அரசியலில் சேர்ந்துள்ளார்கள். இதுப்பற்றி டெல்லி கணேஷிடம், உங்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லையா.? என்று கேட்டபோது, அவர் நம்மிடம் கூறியதாவது...


தினமும் எனக்கு 40 போன்கள் வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் என்னையும் தங்களது கட்சியில் இணைக்க பேசி வருகிறார்கள். ஆனால் அவர்களிடத்தில் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என்று நேரடியாகவே கூறிவிட்டேன். அரசியலுக்கு போவதென்றால் சின்ன வயதிலேயே சென்றிருக்க வேண்டும், இப்போது இந்த வயதில் அது எல்லாம் சரிப்பட்டு வராது. என் உடல்நிலை தான் பாதிக்கும் என்றவர், ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைத்தார், அது என்ன கோரிக்கை.?


ஒரு வேட்பாளரை தேர்வு செய்யும் முன், அவர் எவ்வளவு தொகை செலவிடுவார் என்பதை பார்க்காமல, அவர் படித்தவரா.?, அவரின் தகுதி என்ன, நல்லவரா, கெட்டவரா.?, அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா.?, மக்களுக்கு என்ன நல்லது செய்வார் போன்ற விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து அந்த வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in