‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
குமாரி 21F படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை ஹீப்பா பட்டேலே குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களின் முதல் விருப்ப தேர்வாக உள்ளார். பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஹீப்பா பட்டேலை அணுகியுள்ளனர். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் தாகூர் மற்றும் புஜ்ஜி இணைந்து தயாரிக்கும் படத்தில் ஹீப்பா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தில் வருண் தேஜிற்கு ஜோடியாக ஹீப்பா நடிக்கவுள்ளார். ஏப்ரல் 8 முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. முதலில் இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கை நடிக்க வைக்க தயாரிபாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் ராகுல் ப்ரீத்தி சிங் அதிக சம்பளம் கேட்டதால் ஹீப்பாவை இப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். ராஜ் தருணுடன் எடோ ராகம் அடோ ராகம் படத்தில் நடித்து வரும் ஹீப்பா இயக்குனர் பாஸ்கர் இயக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நிகிலுக்கு ஜோடியாக நடிக்கவும் ஹீப்பாவிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது.