ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் தொடங்கி காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ என பல படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். மேலும், ஷங்கர்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்த நிலையில், தற்போது ரஜினி-அக்சய்குமாரை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார்.
குறிப்பாக, முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்திற்காக அதிக காலஅவகாசம் எடுத்து டியூன் போட்டுக் கொண்டிருக்கிறாராம் ரகுமான். மேலும், இந்த படத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களுக்கான டியூன்களை ரெடி பண்ணி டைரக்டர் ஷங்கரிடம் ஏற்கனவே அவர் ஓகே செய்து விட்டாராம். மற்ற பாடல்களுக்கான டியூன்களை தற்போது உருவாக்கி வருகிறாராம் ஏ.ஆர்.ரகுமான். மேலும், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் லண்டனில் நடைபெறுவதை அடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவும் லண்டனில் நடக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.