Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை மனீஷாவுக்கு கோல்டு மெடல்!

18 மார், 2016 - 07:49 IST
எழுத்தின் அளவு:
Actress-Manisha-got-Gold-Medal

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் மனீஷா. அதையடுத்து ரகளைபுரம், மறுமுனை ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது ரயில் நகர், நீங்காத எண்ணம், அழகான நாட்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் நடித்து வந்தபோதும் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் மனீஷா. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் அவரது கனவாம்.


இதுபற்றி மனீஷா கூறுகையில், சினிமாவில் களவாணி படத்தில் விமலின் தங்கையாக நடித்த எனக்கு அதையடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. என்றாலும், படித்து வந்ததால் நிறைய படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை. அதனால் படிப்புக்கு பாதகம் ஏற்படாத வகையில் படங்களை செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். ஆரம்பத்தில் தங்கை வேடங்களில் நடித்து வந்த நான் இப்போது கதாநாயகியாக நடித்து வருகிறேன்.


இந்த நிலையில், தற்போது சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் யூனிவர்சிட்டியில் பிஎஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் இரண்டாமாண்டு படித்து வருகிறேன். குறிப்பாக, தமிழ் பாடத்தில் 95 சதவிகிதம் மதிப்பெண் பெற்றேன். அதற்காக நேற்று முன்தினம் எஸ்ஆர்எம் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தின்போது எனக்கு சான்றிதழ் மற்றும் கோல்டு மெடல் வழங்கப்பட்டது. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.


அந்த நிகழ்ச்சியில், எஸ்ஆர்எம் கல்லூரி இயக்குனர் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன், அனிதாகுப்புசாமி உள்பட பல விஐபிக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்று கூறும் நடிகை மனீஷா, மீனாவின் தீவிரமான ரசிகையாம். அவர் நடித்த என் ராசாவின் மனசிலே, எஜமான் ஆகிய படங்கள் ரொம்ப பிடிக்கும். அதனால் மீனாவை ரோல் மாடலாகக்கொண்டு எனது சினிமா பயணம் தொடரும் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in