'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
நடிகர் - நடிகையர் பெயரில் ஏராளமான போலி டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களைப்பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது போன்று யாரோ போலி மனிதர்கள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படி தவறான தகவல்கள் வெளியிடப்படுவதால் நடிகர் நடிகைகளைப்பற்றி தவறான செய்திகள் இணைய தளங்களிலும் வெளியாகி வருகின்றன. மேலும், தங்களுக்கு தெரியாமல் தங்களது பெயரில் டுவிட்டர் இருப்பதை அறிந்த சிலர், அது போலியானது என்பதை தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், ஷாலினியின் தங்கையான ஷாம்லியும் தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு இருப்பதாக தற்போது தகவல் வெளியிட்டிருக்கிறார். அதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இதுவரை நான் சமூக வலைதளத்திற்குள் வரவில்லை. ஆனால் யாரோ விஷமிகள் எனது பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கி அதில் நான் என் சம்பந்தப்பட்ட படங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்வதுபோல் செய்து வருகின்றனர். அதை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ள ஷாம்லி, இந்த போலியான டுவிட்டர் கணக்கை நம்பி ரசிகர்கள் ஏமாற வேண்டாம். நான் டுவிட்டர் கணக்கு தொடங்கும்போது முறையாக அறிவிப்பேன் என்றும் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.