'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் உதவி இயக்குனராக இருந்து பின்னர் முதல் படம் இயக்கியபோது விபத்தொன்றில் இறந்தார். அவரது நினைவாக அவரது குடும்பத்தினர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் என்ற அறக்கட்டளையை நிறுவி ஆண்டுதோறும் சிறந்த படத்தை தரும் அறிமுக இயக்குனருக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார்கள்.
2015ம் ஆண்டுக்கான விருதுக்கு இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியான 33 படங்களை ஆய்வு செய்து அவற்றில் இருந்து லென்ஸ் என்ற ஆங்கில படத்தை தேர்வு செய்துள்ளனர். இதன் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் கொல்லப்படி ஸ்ரீநிவாஸ் விருது பெறுகிறார். இந்த விருது தேர்வு கமிட்டியில் இயக்குனர் வசந்த், சிங்கீதம் சீனிவாசராவ், நடிகை ரோகினி இருந்தனர்.
லென்ஸ் திரைப்படம் இரண்டு வெவ்வேறு பின்னணியை கொண்ட கதாபாத்திரங்கள் பற்றிய படம். அறிமுகம் இல்லாத இரண்டு பேரின் உரையாடலால் நேரும் கடத்தல் சம்பவம் மற்றும் அதை சார்ந்த கதை. இதில் அறிமுக இயக்குனரான ஜெய பிரகாஷ் ராதாகிருஷ்ணன் அரவிந்த் என்ற முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 12ம் தேதி விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவுள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் நினைவு கேடையமும் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதில் திரைப்பட முன்னணியினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.