ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேர்தல் காலம் வந்துவிட்டால் சினிமா நடிகர்கள்,ஏதாவது ஒரு கட்சியில் தங்களை இணைத்து கொள்வதும் அல்லது ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் மே., 16ம் நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள்,நடிகர்களை தங்கள் கட்சிக்கு இழுத்த வண்ணம் உள்ளனர். அதேப்போன்று நடிகர்களும் தாங்களாகவே சென்று சில கட்சிகளில் இணைகின்றனர்.
சமீபத்தில் நடிகரும், இயக்குநருமான விசு, பா.ஜ.வில் தன்னை இணைத்து கொண்டார். இப்போது அவரைத் தொடர்ந்து நடிகர் விஜயகுமாரும் தன்னை பா.ஜ.,வில் இணைத்து கொண்டார். சென்னை கமலாலயத்தில் பா.ஜ.,வின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை இன்று(மார்ச் 16ம் தேதி) சந்தித்து, தான் பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், தமிழகத்தில் மாபெரும் சக்தியாக பா.ஜ., உருவெடுக்கும், அதற்கு நான் என்றும் துணை நிற்பேன், கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவை பொறுத்து, அடுத்து நான் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன் என்று கூறினார்.
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் விஜயகுமார்.