ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'நானும் ரௌடிதான், சேதுபதி' ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளிவந்த 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வசூலைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்திற்கான விமர்சனங்களும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலேயே வந்து கொண்டிருக்கின்றன. கொரியன் படத்தின் ரீமேக் தான் என்றாலும் அதைத் தமிழ்ப்படுத்தியிருக்கும் விதம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சுமார் 7 கோடி ரூபாய்க்கும் மேல் இப்படம் வசூலித்திருக்கலாம் என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி நடித்து இதுவரை வெளிவந்த படங்களிலேயே இந்தப் படத்தின் வசூல்தான் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. 'நானும் ரௌடிதான்' படம் கூட பத்து நாட்களில்தான் மூன்று கோடி ரூபாயை வசூலித்ததாகச் சொன்னார்கள். ஆனால், 'காதலும் கடந்து போகும்' படம் மூன்றே நாட்களில் 7 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது.
'சூது கவ்வும்' படம் மூலம் வித்தியாசமான படத்தைக் கொடுத்த கூட்டணியான இயக்குனர் நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணியாக தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்துள்ளது.