Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரி உடன் கைகோர்க்கும் ஜீவா

14 மார், 2016 - 14:51 IST
எழுத்தின் அளவு:
Jeeva---Soori-team-up

விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி வரும் அட்லி 'A for Appl'e என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து 'சங்கிலி பங்கிலி கதவ தொற' என்ற படத்தை தயாரித்து வருகிறார். கமல்ஹாசன், ப்ரியதர்சன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஐ.கே.ஈ இயக்கும் இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.


இது காமெடி ஓரியண்டட் சப்ஜெக்ட் என்பதால், இப்படத்தில் நடிக்கும்படி சந்தானத்தை அணுகினார்கள். ஏற்கனவே ஜீவா, சந்தானம் காம்பினேஷனில் சிவா மனசுல சக்தி படம் ஹிட்டானதை வைத்து அவரை காமெடியாக்க எண்ணினர். ஹீரோவாகிவிட்டதால் இனி காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று அவர் மறுத்துவிட்டார். எனவே அடுத்த சாய்ஸாக சூரியை கமிட் பண்ணி உள்ளனர்.


இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் ஜீவா உடன் முதன் முதலாக காமெடி கேரக்டரில் சூரி நடிக்கிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் ராதாரவியும் நடிக்கிறார் என்பதெல்லாம் உப தகவல்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in