‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இந்தியில் உருவான நில் பட்டே சனட்டா என்ற படம் பல சர்வதேச விருதுகளை குவித்தது. ஒரு இளம் பெண்ணுக்கும், அவளின் 13 வயது மகளுக்குமான உறவை, உணர்வை சொல்லும் படம். இந்த படம் தமிழில் 'அம்மா கணக்கு' என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. தனுஷ் தயாரித்துள்ளார். இதில் அமலாபால் அந்த இளம் அம்மாவாக நடித்துள்ளார். அவரது தோழியாக ரேவதி நடித்துள்ளார். அம்மா கேரக்டருக்காக, அமலா 5 கிலோ வரை எடையை கூட்டி நடித்துள்ளார். இந்திப் படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரியே தமிழிலும் இயக்கி உள்ளார். இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளிவருகிறது.
இதன் இந்திப் படத்தில் அமலா பால் கேரக்டரில் நடித்திருந்த ஸ்வரா பாஸ்கருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. அதே கேரக்டரில் அமலாபால் நடித்திருப்பதால் அவர் எப்படி நடித்திருப்பார் என்கிற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மகளை வளர்ப்பதற்காக வீட்டு வேலை செய்யும் பெண்ணின் கேரக்டரில் அமலாபால் நிஜமாகவே வீட்டு வேலைகளைச் செய்து நடித்திருக்கிறார். ஸ்வரா பாஸ்கரைப்போலவே தனக்கும் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அமலாபால். காக்கா முட்டை , விசாரணை மாதிரி இந்த படமும் தனக்கு வெற்றியையும், விருதுகளையும் தரும் என்று காத்திருக்கிறார் தனுஷ்.