ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் சிவன் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். அவர் தலைவராகவும், போஸ் வெங்கட் பொதுச் செயலாளராகவும், பரத் கல்யாண் பொருளாளராகவும், கமலேஷ், சோனியா ஆகியோர் துணை தலைவர்களாகவும். துணை செயலாளர்களாக டெல்லி கணேஷ் சதீஷ், ராஜசேகர் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு, இயக்குனர் கே.பாக்யராஜ், இயக்குனர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன், எம்.ஜி.ஆர் பல்கலைகழக தலைவர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
சின்னத்திரை நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக நடிகை குஷ்பு ஒரு லட்சமும், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் 5 லட்சமும் வழங்கினார். சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுதல், உறுப்பினர்களின் குடும்பத்துக்கு மருத்து வசதி செய்து தருதல் குழந்தைகளுக்கு கல்வி வசதி ஏற்படுத்தி தருதல் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.