மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய, மாநில அரசு விருதுகளை பெற்றவர் பேபி ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்த அவர், குமரியான பிறகு தனது மச்சான் அஜீத் நடித்த கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் மற்றும் ஒய் தெலுங்கு படத்திலும் நடித்தார். பின்னர் வெளிநாடு சென்று படிப்பைத் தொடர்ந்தவர், இப்போது மறுபடியும் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். தமிழில் விக்ரம் பிரபு நடிக்கும் வீர சிவாஜி படத்தில் நடிப்பவர், மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிக்கும் வள்ளியும் தேட்டி புள்ளியும் தேட்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே தனுஷின் கொடி படத்திலும் நடிப்பதாக இருந்தார். ஆனால், வள்ளியும் தேட்டி புள்ளியும் தேட்டி மலையாள படத்திற்கு கொடுத்திருந்த அதே தேதியில் தனுஷின் கொடி படத்திற்கும் கால்சீட் கேட்டதால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் ஷாம்லி. மேலும், தற்போது விக்ரம் பிரபுவுடன் நடித்து வரும் ஷாம்லி, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால்தான் முன்னணி ஹீரோயினாக முடியும் என்பதால் தற்போது சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.