தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'நாய்கள் ஜாக்கிரதை' படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகராகியிருக்கிறார் சிபிராஜ். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த போக்கி ராஜா படத்தில் 'கூலிங் கிளாஸ்' குணா கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. தற்போது 'ஜாக்சன் துரை' படத்தில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக புதுமுக இயக்குநர் ஆர்.மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மணிகண்டன், 'ஈரம்' அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று(மார்ச் 11ம் தேதி) துவங்கியது. இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன், காளிவெங்கட், திருமுருகன், ஜெயகுமார், மைம் கோபி, சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறகிறது.
இப்படத்திற்கு, சமீர் சந்தோஷ் இசையமைக்க, ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். Wind Chimes Media Entertainments நிறுவனம் தயாரிக்கிறது