மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பமாகின்றன. இன்று ஆரம்பமாகும் போட்டி ஏப்ரல் 3ம் தேதி வரை சுமார் 25 நாட்கள் நடைபெற உள்ளன. தோனி தலைமையிலான இந்திய டி-20 கிரிக்கெட் அணி, சமீபத்தில் நடந்து முடிந்து டி-20 ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. அதனால், இந்திய அணி டி-20 உலகக் கோப்பைப் போட்டியிலும் சாதிக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போட்டிகள் அனைத்தும் டிவியில் வேறு நேரடியாக ஒளிபரப்பாவதால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் திரைப்படங்களின் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த வாரம் முதல் +2 தேர்வுகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது. அடுத்து 10ம் வகுப்புத் தேர்வுகளும் ஆரம்பமாக உள்ளன. தேர்வுகளும், கிரிக்கெட் போட்டிகளும் முடிவுக்கு வரும் நாட்களில் அடுத்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களை கட்டிவிடும். அதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக திரைப்பட வசூல் என்பது தள்ளாட்டத்தில் இருக்கும் என்று திரையுலகத்தினரே கவலையில் இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 11ம் தேதி 5க்கும் மேற்பட்ட படங்களும் வரும் வாரங்களில் இன்னும் பல படங்களும் வெளியாக உள்ளன. கல்லூரி மாணவர்கள் வயதுடைய இளைஞர்கள்தான் தற்போது அதிகமாகத் திரைப்படம் பார்க்க வருகிறார்கள். அவர்களும் கிரிக்கெட்டி போட்டி பார்க்க உட்கார்ந்துவிட்டால் அந்த வசூலும் பாதிக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்கள் திரைப்படத் துறையினருக்கே சோதனையான காலம்தான். அதையும் மீறி வெளிவரும் படங்கள் வெற்றி பெற்றால் அது அந்தந்தப் படங்களின் தரத்தில் மட்டுமே இருக்க முடியும். தங்கள் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நினைப்பவர்கள் மட்டும் தைரியமாக படத்தை வெளியிட முன் வரலாம். மற்றவர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வருவதே அவர்களுக்கும் நல்லது, அவர்களது படங்களுக்கும் நல்லது என அனுபவ வினியோகஸ்தர் தெரிவிக்கிறார்.