ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருச்சியை அடுத்து பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் போக்கிரி ராஜா படக்குழுவினர் ஜீவா, ஹன்ஷிகா மற்றும் தயாரிப்பாளர் பி்.டி. செல்வகுமார் மூவரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஜீவா, இப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. படத்திற்கு இளைஞர்கள் அளித்து வரும் ஆதரவு திருப்தியாக இருப்பதாகவும், தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் பேன்டஸி படங்களில் நடிப்பேன் எனவும் கூறினார்.
ஹன்ஷிகா பேசும்போது.... ''மாணவர்கள் வெள்ளத்தில் தான் மலைத்துப் போய் இருப்பதாகவும், தன்னை இப்படி கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை'' எனக் கூறினார்.
விழாவில் மாணவர்கள் போக்கிரி ராஜா படத்தின் பாடல்களுக்கு உறசாகமாக நடனம் ஆடினர், அப்போது ஜீவா, ஹன்ஷிகா இருவரும் மேடைக்குச் சென்று அவர்களுடன் இணைந்து நடனமாடினார்கள். இதைக் கண்ட ஒட்டுமொத்த மாணவர்களும் நடனமாட அந்த இடமே குதூகலமானதோடு ஸ்தம்பித்தும் போனது.