ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹிந்தியில் சீனிகம், பா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் தமிழ்நாட்டுக்காரரான பால்கி. இவர் தனுஷை வைத்து கடந்தாண்டு இயக்கிய ஷமிதாப் படம் சரியாக போகவில்லை. முன்னதாக இப்படத்தில் நடிகர் ஷாரூக்கானை தான் நடிக்க வைக்க எண்ணினார் பால்கி. ஆனால் அது அப்போது முடியவில்லை, அதன்பின்னரே தனுஷை நடிக்க வைத்தார். தற்போது இவரது இயக்கத்தில், அர்ஜூன் கபூர், கரீனா கபூர் நடிப்பில் கி அண்ட் கா படம் வௌியாக உள்ளது. சமீபத்தில் பால்கி அளித்த பேட்டியின் போது, ஷாரூக் குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த பால்கி, ''ஷாரூக்கான் அற்புதமான நடிகர். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ஷாரூக்கானுக்கு ஏற்ற நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக அவரை அணுகுவேன்'' என்று கூறியுள்ளார்.