தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு காலத்தில் கோலிவுட் சினிமாவில் நடித்து வந்த பெரும்பாலான நடிகைகள் ரஜினியின் ரசிகைகளாக இருந்தனர். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது சினிமா லட்சியமாக இருந்து வந்தது. அதேபோல் இப்போது வரும் நடிகைகள அஜித்தின் ரசிகைகளாக உள்ளனர். யாரைக்கேட்டாலும், அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். அப்படி அவருடன் நடித்து விட்ட நடிகைகளோ, பந்தா இல்லாத எளிமையான நடிகர். உடன் நடிப்பவர்களையும் மதிக்கக்கூடிய நல்ல மனிதர் என்றெல்லாம் அஜித் புராணம் பாடி வருகின்றனர்.
இப்படி கோலிவுட்டில் உள்ள பல நடிகைகள் அஜித்தின் அருமை பெருமைகளை பேசிக்கொண்டு வரும் நிலையில், அஜித் என் உடன்பிறவாத அண்ணன் என்று சகோதரத்துவம் பேசி வருகிறார் லட்சுமிமேனன். இந்நிலையில், பிச்சைககாரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ள இன்னொரு கேரள வரவு நடிகையான சாதனா டைட்டசும், நான் அஜித்தின் தீவிரமான ரசிகை. அவர் நடித்த படங்களை தவறாமல் பார்த்து வருகிறேன். அதனால் தமிழில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து எப்படியாவது அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது நோக்கமாக உள்ளது என்று கூறி வருகிறார்.